வசதிகள்
பேராவூரணியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் கணினி அறிவினை மேம்படுத்திட 25 கணினிகள் கொண்ட கணினி ஆய்வகம் உள்ளது. இக்கணினி ஆய்வகத்தை நன்முறையில் பயன்படுத்தி கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் கணினியைக் கையாளும் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்
- மாணவர்களின் கற்றலை மேம்படுத்திட இணைய இணைப்புடன் கூடிய எல்சிடி ப்ரொஜெக்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. விளக்கக்காட்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பணிப்பட்டறைகளை நவீன முறையில் செயல்படுத்திட இது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பேராசிரியர்களுக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாய் உள்ளது.
- ஆடியோ மற்றும் வீடியோ பதிவு செய்யும் வசதியை இக்கணினி ஆய்வகம் கொண்டுள்ளது.
- அனைத்து கணினிகளும் நவீன தொழில்நுட்பத்துடனும், வைரஸ் தடுப்பு பாதுகாப்புடனும் நன்கு செயல்படுகின்றன.
- அனைத்து கணினிகளும் LAN மூலம் இணைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அகண்ட அலைவரிசை இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது..
- கணினி ஆய்வகம் முழுவதும் இன்வெர்ட்டர் வசதியுடன் பராமரிக்கப்படுவதால் மாணவர்களுக்கு தடையற்ற சேவைகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.