நாட்டு நலப்பணித் திட்டம்

சமூகப்பணி வழிக்கல்வி என்ற குறிக்கோளுடன் மாணவத்தொண்டர்களைக் கொண்ட இரண்டு நாட்டு நலப்பணித் திட்ட அலகுகள் நம் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
1. இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒவ்வொரு மாணவரும் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டும்.
2. பல்கலைக்கழகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சிறப்பு பணித்திட்டத்தில் ஒவ்வொரு தொண்டரும் ஓராண்டில் 120 மணி நேரங்களாவது பணிபுரிய வேண்டும்.
3. கல்விநிலையப்பணிகள்,சமூகப்பணிகள் , கல்வி முறைப்பணிகள் , உடல், உழைப்பு ,சுகதாராப்பணிகள் சமூக நலப்பணிகள் ,தேசிய நலப்பணிகள், ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும்.
4. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் விவரம் வருமாறு
அலகு 1: முனைவர் . திருமதி .சி .இராணி
உதவிப்பேராசிரியர் ,தமிழ்த்துறை
அலகு 2 : முனைவர் .திரு . நா .பழனிவேலு
உதவிப்பேராசிரியர் , வணிகவியல் துறை .